உத்தமவில்லனை எதிர்பார்க்கும் ஜிப்ரான்!

Bookmark and Share

உத்தமவில்லனை எதிர்பார்க்கும் ஜிப்ரான்!

விமல்-இனியா நடித்த வாகை சூடவா படத்துக்கு இசையமைத்தவர் ஜிப்ரான். அந்த படத்தில் அவரது பாடல்கள் பேசப்பட்டதால், அடுத்தடுத்து வத்திக்குச்சி, குட்டிப்புலி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா, அமரகாவியம் என பல படங்களுக்கு இசையமைத்தார்.

ஆனால், முதல் படத்தின் பாடல்களுக்கு கிடைத்தது போன்று பின்னர் எந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகவில்லை. இந்த நிலையில், வாகை சூடவா படத்தில் அவரது இசை பிடித்திருந்ததால் தனது விஸ்வரூபம் -2 , உத்தமவில்லன், பாபநாசம் என மூன்று படங்களுக்கும் வரிசையாக அவரை புக் பண்ணினார் கமல்.

அதனால் ஒரே நேரத்தில் கமல் நடிக்கும் 3 படங்களுக்கு இசையமைக்கும் பெருமை பெற்றிருக்கிறார் ஜிப்ரான். அதோடு, வாகை சூடவாவிற்கு பிறகு அவர் ஹிட் கொடுக்காததால் மற்ற இயக்குனர்கள் யாருமே அவரை கண்டுகொள்ளவில்லை.

அதனால் மார்ச்1-ந்தேதி ஆடியோ வெளியாகயிருக்கும் உத்தமவில்லன் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் ஜிப்ரான். அதுமட்டுமின்றி, அவர் சான்ஸ் கேட்டிருக்கும் டைரக்டர்களும், உத்தமவில்லன் வரட்டும் முடிவெடுக்கலாம் என்றுதான் காத்திருக்கிறார்களாம். ஆக, உத்தமவில்லன் ஜிப்ரானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாகியிருக்கிறது.


Post your comment





Related News
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
கமலின் படத்திற்காக ஜெயிலுக்கு போன இசையமைப்பாளர் ஜிப்ரான்.!
இந்த விஷயம்னா கூச்சப்படவே மாட்டேன் - ஜிப்ரான் ஓபன்டாக்
அறம் படத்துக்காக ஹாலிவுட் இசைகுழுவுடன் ஜிப்ரான் இணைகிறார்
அர்னால்டு படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்?
யுவனை ரீப்ளேஸ் செய்த ஜிப்ரான்!
‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இரண்டாவது பாடல் பூட்டானில் வெளியிடப்பட்டது
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions