பாரதிராஜாவை பார்த்து காப்பி அடிக்கவில்லை : கிரிஷ் கர்னாட் காட்டம்

Bookmark and Share

பாரதிராஜாவை பார்த்து காப்பி அடிக்கவில்லை : கிரிஷ் கர்னாட் காட்டம்

பாரதிராஜா-விஷால் தந்தை மகனாக நடித்த படம் ‘பாண்டியநாடு' . கன்னடத்தில் ‘ருத்ரதாண்டவா'  பெயரில் ரீமேக் ஆகிறது. பாரதிராஜா ஏற்று நடித்த தந்தை வேடத்தில் சீனியர் நடிகர் கிரிஷ் கர்னாட் நடிக்கிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் குணசித்ர வேடங்களில் நடித்தவர். தமிழிலிருந்து ரீமேக் ஆகும் படத்தில் பாரதிராஜா நடிப்பை பார்த்து நீங்கள் நடித்தீர்களா? என்றதற்கு பதில் அளித்தார்.

தமிழில் வெளியான பாண்டியநாடு படத்தை நான் பார்க்கவில்லை. அதை ஏன் நான் பார்க்க வேண்டும்? என்னை வைத்து இயக்கும் இயக்குனர் எப்படி நடிக்க வேண்டும் என்று கேட்கிறாரோ அதை செய்வேன்.

ஒருவேளை அவர் காட்சியையோ, கதாபாத்திரத்தையோ மாற்றி இருக்கலாம். அதற்கு ஏற்பத்தான் நான் நடிக்க வேண்டும். இன்னொருவரது நடிப்பை நான் காப்பி அடித்து நடிக்கவேண்டிய அவசியமில்லை.

இவ்வளவு வயதுக்கு பிறகும் நடிக்கிறீர்களே என்ன காரணம் என்கிறார்கள்? பணம்தான். இல்லாவிட்டால் வீட்டில் ஓய்வாக உட்கார்ந்து புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பேன்.

ஜட்ஜ் வேடம், போலீஸ் ஆபீசர் வேடம், டாக்டர் வேடத்தில் நடிக்க ஒன்றிரண்டு நாள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டு நிறையபேர் வருகிறார்கள். அதில் எனக்கு ஆர்வம் இல்லை. அப்படி நடித்து பணம் சம்பாதிக்க விரும்பவில்லை.இவ்வாறு கிரிஷ் கர்னாட் கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions