ஆச்சரியப்பட வைத்த கமல்: பேராசிரியர் ஞானசம்பந்தன்!

Bookmark and Share

ஆச்சரியப்பட வைத்த கமல்: பேராசிரியர் ஞானசம்பந்தன்!

பட்டிமன்றப் பேச்சாளரும் பேராசிரியருமான கு.ஞானசம்பந்தன் இப்போது சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இதுவரை குட்டிப்புலி, போராளி, பிரம்மன், நிமிர்ந்து நில், கொம்பன், உத்தமவில்லன் போன்ற 16 படங்களில் நடித்து விட்டார். ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனின் அப்பாவாக முழுநீள வேடம் ஏற்று நடித்துள்ளார். ஞானசம்பந்தனின் அப்பாவாக நடிப்பவர் ராஜ்கிரண். இது தவிர சீனுராமசாமியின் இடம்பொருள் ஏவல், படத்தில் பட்டிமன்ற நடுவராகவே வருகிறார். அடுத்து சரணின் ஆயிரத்தில் இருவர் படத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு கிராமத்து தலைவராக வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் 45 நாட்கள் மதுரை, தேனி, கொத்தமங்கலம், பள்ளத்தூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார். அது கலகலப்பான ஜாலியான அனுபவமாம். இடம்பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணுவுடன் நடித்ததில் தானும் இளமையாக இருப்பதாக உணர்ந்தாராம். ஆயிரத்தில் இருவர் படத்துக்காக கல்லிடைக் குறிச்சியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். பொதுவாக பட்டிமன்றங்களில் சினிமாவை கிண்டல் செய்வதுண்டு. ஆனால் இவர் அப்படியில்லையாம்.

"எனக்கு சினிமா மீது ஆர்வமுண்டு நான் சினிமாவை நேசிப்பவன். எனக்கு சினிமாவில் கமல்சார் உள்பட பல நண்பர்கள் இருக்கிறார்கள். என் சினிமா வாழ்க்கை தரையிலிருந்து திரைக்கு போனது பல அனுபவங்களைக் கொடுத்து இருக்கிறது. சுலபமாகக் குறைகளையும்  சொல்லி விடலாம்; கேலியும் பேசி விடலாம். ஆனால் அருகில் சென்று பார்த்தால்தான் அதிலுள்ள சிரமங்களும் போராட்டங்களும் புரியும் " என்கிறவர் கமல் பற்றிய அனுபவம் ஒன்றை கூறினார்.

சமீபத்தில் கமல்சாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ஔவையாரின் சுட்டபழம் சுடாதபழம் நிகழ்ச்சியைக் கூறி கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி  பாடலைச் சொல்ல ஆரம்பித்தேன். உடனே கமல்சார் முழுப்பாடலையும் பாடிக் காட்டினார். எப்படி இது உங்களுக்குத் தெரியும் என்று கேட்டேன் சண்முகம் அண்ணச்சி ஔவையார் வேடம் போட்டு நாடகம் நடித்த போது சுட்டபழம் சுடாதபழம் கேட்கும் மாடு மேய்க்கும் சிறுவனாக நடித்தவனே நான்தான் எனக்குத் தெரியாதா? என்றாரே பார்க்கலாம். நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன்." இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment

Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions