இசைவெளியீட்டு விழாவில் நடிகரை வருத்தெடுத்த கே.இ.ஞானவேல் ராஜா

Bookmark and Share

இசைவெளியீட்டு விழாவில் நடிகரை வருத்தெடுத்த கே.இ.ஞானவேல் ராஜா

ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணா துரை’.

ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. அதேநேரத்தில் விஜய் ஆண்டனியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி, டயானா சாம்பிகா, ஜுவல் உள்ளிட்ட படக்குழுவினருடன் கே.பாக்யராஜ், சரத்குமார் உதயநிதி ஸ்டாலின், கே.இ.ஞானவேல் ராஜா, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதில் ஞானவேல் ராஜா பேசும் போது,

படக்குழுவினரை பாராட்டி பின்னர், நடிகர் ஒருவரை வறுத்தெடுத்தார். சமீபத்தில் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகிய படம் ஒன்று அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இதனால் அந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு நடத்த நடிகரை அந்த படத்தின் தயாரிப்பாளர் பார்க்க 4 மணிநரேமாக காத்திருந்தும் பலனில்லை. மாறாக  நடிகரை தொடர்பு கொண்ட போது ஏற்கனவே எடுத்த காட்சிகளை வைத்து படத்தை முடித்துக் கொள்ளுமாறு நடிகர் கூறிவிட்டாராம்.

பொதுவாகவே அந்த நடிகர் படப்பிடிப்பிற்கு சரியாக வருவது இல்லை என்று புகார் இருக்கிறது. அதிலும் அந்த படத்தில் நடிக்கும் போது குறிப்பிட்ட நேரம் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பாராம். என்று கூறினார்.

ஞானவேல் ராஜா எந்த நடிகரை குறிப்பிட்டு கூறினார் என்பது ரசிகர்களின் யோசனைக்கே விடப்படுகிறது. 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions