ரஞ்சித்துக்கு கை கொடுத்த ஞானவேல்ராஜா

Bookmark and Share

ரஞ்சித்துக்கு கை கொடுத்த ஞானவேல்ராஜா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் சூர்யாவின் நடிப்பில் ஒரு படத்தையும், மற்றொரு முன்னணி நடிகரின் நடிப்பில் இன்னொரு படத்தையும் அடுத்தடுத்து இயக்கித்தருவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் ரஞ்சித் ஒப்பந்தம் செய்திருந்தாராம். இந்த நேரத்தில் தான் ரஜினியின் படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிட்டியது.

ஆனால் ஞானவேல்ராஜாவிடம் ஒப்பந்தம் செய்துகொண்டதால் ரஞ்சித் தவித்திருக்கிறார். இத்தகவலை கேள்விப்பபட்ட ஞானவேல்ராஜா, தங்கள் படத்தை ஒத்திவைத்துவிட்டு, ரஜினியின் படத்தை இயக்குமாறு ரஞ்சித்துக்கு வழிவிட்டாராம்.

இது குறித்து ஞானவேல்ராஜா கூறுகையில், இரண்டு படங்கள் இயக்கித்தருவதாக எங்களிடம் ரஞ்சித் ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மை தான். ஆனால் ரஜினி படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிடைத்ததும், அவருக்கு குறுக்கே நிற்க நாங்கள் விரும்பவில்லை. ரஜினி படத்தை முடித்துவிட்டுத்தான் ரஞ்சித் எங்கள் படத்தை இயக்குவார் என்று கூறினார்.

இதனால் ரஜினி படத்தை இயக்கப்போகிறோம் என்று மகிழ்ச்சியில் இருந்த ரஞ்சித், இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ஞானவேல்ராஜாவால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். மகிழ்ச்சியடைந்தது ரஞ்சித் மட்டுமல்ல, ரஜினி ரசிகர்களும் தான். சீக்கிரம் தலைவர், சென்னை தமிழ் பேசி நடிக்கின்றாரா என்பதை சொல்லிடுங்க பாஸ் என்று ரஜினி ரசிகர்கள் ரஞ்சித்துக்கு வேண்டுகோளும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்
இசைவெளியீட்டு விழாவில் நடிகரை வருத்தெடுத்த கே.இ.ஞானவேல் ராஜா
டி.வி.களுக்கு ஏன் படங்களை இலவசமாக வழங்க வேண்டும்: காப்புரிமை பிரச்சனை எழுப்பும் ஞானவேல்ராஜா
"உன்னை தேடி வருவேன் ****!" பொது மேடையில் கெட்டவார்த்தையில் திட்டிய ஞானவேல் ராஜா
ஞானவேல் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஞானவேல்ராஜாவின் பாகுபலி பயம்
தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் ஞானவேல்ராஜா
கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” பெருமையுடன் வழங்கும் “புரோடக்ஷன் நெ.14”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions