கோகுல் இயக்கத்தில் கார்த்தி

Bookmark and Share

கோகுல் இயக்கத்தில் கார்த்தி

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலையில் இறங்கி விட்டார் இயக்குனர் கோகுல். இந்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.

மெட்ராஸ் படத்தில் நடித்த நாயகியை இந்த படத்திலும் நடிக்க வைக்கலாம் என்று யோசனை சொல்லியிருக்கிறார் கார்த்தி. இதை ஏற்றுக் கொண்ட கோகுல். கதை பொருத்தமாக இருந்தால் அவருக்கு வாய்ப்பு கொடுப்போம்.

அப்படி இல்லை என்றால் அவர்தான் நடிக்கணும் என்கிற கட்டாயம் இருந்தால் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் கோகுல். இதை கேட்ட கார்த்தி ஸாரி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எனக்கு தோன்றியதை சொன்னேன் என்று கூறிவிட்டாராம் நாயகன்.

இதே படத்தில் நடிக்கவிருக்கும் வில்லன் நடிகர்களுக்கும் கார்த்தி சிபாரிசு செய்கிறார். இதை தட்டாமல் ஓகே செய்கிறார் இயக்குனர். தலைப்பு இன்னும் வைக்கவில்லை. மற்ற வேலைகள் நடந்து வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions