கொம்பனுக்காக வெயிட் பண்ணும் கோகுல்!

Bookmark and Share

கொம்பனுக்காக வெயிட் பண்ணும் கோகுல்!

ஜீவா நடித்த ரெளத்திரம் படத்தை இயக்கியவர் கோகுல். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்த்த கோகுலுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. பிறகு, விஜயசேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கினார் கோகுல். அப்படம் ஹிட்டானது.

அதனால் அதையடுத்து முன்னணி ஹீரோக்கள் யாரையாவது வைத்து படம் இயக்கி விட வேண்டும் என்று பல ஹீரோக்களிடம் கதை சொன்ன அவர், கார்த்தியிடம் சொன்ன கதை ஓகே ஆனதால், அவர் கால்சீட் கொடுத்தார்.

அதோடு, நயன்தாராவை அவருடன் ஜோடி சேர்க்க நினைத்த கோகுல், அவரையும் கமிட் பண்ணி விட்டார். ஆனால், கொம்பனுக்குப் பிறகு காஷ்மோரா என்ற அப்படத்தில்தான் கார்த்தி நடிப்பார் என்று நினைத்தால், தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகும் பிவிபி நிறுவன படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதோடு, தனது பையா நாயகி தமன்னாவுடன் மீண்டும் ஜோடி போட்டிருக்கிறார் கார்த்தி. இதன்காரணமாக, கோகுல் கார்த்தியை இயக்கயிருக்கும் காஷ்மோரா படம், நாகார்ஜூனாவுடன் கார்த்தி நடித்து வரும் படம் முடிந்த பிறகுதான் ஆரம்பிக்கிறதாம். அதனால் கார்த்திக்காக வெயிட்டிங்கில் இருக்கிறார் கோகுல். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions