திரைப்பட - தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் 20 லட்சம் மோசடி!

Bookmark and Share

திரைப்பட - தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் 20 லட்சம் மோசடி!

தென்னிந்திய திரைப்பட-தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க அலுவலகம் சென்னை தியாகராயநகரில் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் செயலாளர் ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில்,

‘‘தங்களது சங்கத்தில் ரூ.60 லட்சம் பண மோசடி நடந்துள்ளது என்றும், அலுவலக மேலாளராக பணியாற்றும் அமுதா (வயது 45) என்பவர் இந்த பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரூ.20 லட்சம் அளவில் மோசடி நடந்திருப்பது உறுதிபட தெரியவந்தது.

இதன்பேரில் நேற்று அதிகாலை அமுதாவை மாம்பலம் போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். நேற்று மாலை வரை விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் அமுதா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டார்.


Post your comment





Related News
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
பிரமாண்டமாக நடந்து முடிந்த 74-வது கோல்டன் க்ளோப் விருது விழா- வெற்றியாளர்கள் பட்டியல் இதோ
அனுஷ்காவுக்காக உருவாக்கப்பட்ட ஒரிஜினல் தங்க கிரீடம்..!
\'லைப் ஆப் பை\' படத்துக்கு கோல்டன் குளோப் விருது!
50 பவுன் நகை நடிகை ரம்யாகிருஸ்னனின் வீட்டில் திருட்டு - வேலைக்காரி கைது!
லண்டனில் நடிகை ஹேம மாலினிக்கு சர்வதேச ஆளுமை விருது!
6 கிராம்மி விருதுகள் பெற்ற இசை உலகின் தங்க பெண் ஒய்ட்னி ஹாஸ்டன் மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions