தெலுங்கில் ரீமேக் ஆகும் கோலி சோடா

Bookmark and Share

தெலுங்கில் ரீமேக் ஆகும் கோலி சோடா

ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கோலி சோடா சங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா மற்றும் பலர் நடித்த படம்.

பாண்டிராஜ் இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். சில பல லட்சங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமார் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இப்படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை மட்டும் சுமார் 3 கோடிக்கும் மேல் விற்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரான லகடப்பட்டி ஸ்ரீதர் வாங்கியிருக்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், “கோலி சோடா படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நான் வாங்கியிருக்கிறேன். இந்தப் படம் மிகவும் சிறந்த படம். அற்புதமான கதை கொண்ட இந்தப் படம் அதனுடைய படைப்பால் மட்டுமே ஓடியது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு எந்த நட்சத்திரங்களின் பிரபலமும் தேவைப்படவில்லை. தெலுங்கில் நடிக்க உள்ள நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அது முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோலி சோடா படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் தற்போது கமர்ஷியல் பாதைக்குத் திரும்பிவிட்டார். விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.

 


Post your comment





Related News
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
மக்களுக்கு நல்லது செய்ய வருகிறது ஜிஎஸ்டி வண்டி
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
இது தான் எங்கள் ஐடியா, கோலி சோடா-2 பற்றி வெளிவந்த தகவல்கள்.!
“கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “
கோலி சோடா-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்!
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
சோகத்தில் ஆழ்த்திய இளம் நடிகரின் சகோதரர் மரணம்
மூன்று இளைஞர்களை மையப்படுத்தி உருவாகும் டூமா கோலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions