கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்!

Bookmark and Share

கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்!

ஒரு சில படங்கள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நம்முடைய விருப்ப பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும். உத்வேகம் மற்றும் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் நல்ல கதைகள் தான் உலக அளவில் ரசிகர்களால் ஆரத்தழுவி ஏற்றுக் கொள்ளப்படும்.

அந்த வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு படம் தான் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான விஜய் மில்டனின் கோலி சோடா. ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்ற கோலி சோடாவின் இரண்டாவது பாகம் டீசர் வெளியானதில் இருந்தே ஒட்டு மொத்தமாக ரசிகர்களை  ஈர்த்து வருகிறது.

அழுத்தமான கதை மற்றும் புதிய விஷயங்களோடு வரும் கோலி சோடா 2 இந்த சீசனில் ரசிகர்களை கவரும் படமாக நிச்சயம் அமையும். ரசிகர்கள்  மட்டுமல்லாமல், வணிக வட்டாரங்களும்  கோலி சோடா 2 மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள். 

கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கியிருப்பது கோலி சோடா 2 படக்குழுவை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது, "நல்ல கதைகள் மீதான நம்பிக்கையும், அவற்றை அப்படியே திரையில் கொண்டு வருவதும் ரசிகர்களை எப்போதுமே ஈர்த்திருக்கிறது.

கோலி சோடா படத்தின் வெற்றி எனக்குள் இருந்த நம்பிக்கையை ஊற்றெடுக்க வைத்து, உடனடியாக புது களத்தில் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க வைத்தது. கிளாப் போர்டு சத்தியமூர்த்தி எங்களை போலவே படத்தின் மீது பெரும் நம்பிக்கையை வைத்து, எங்களுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 

மேலும், இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கும். குறிப்பாக சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் ஆன்மாவை உயர்த்தி, எல்லோரையும் வசீகரிக்கும்" என்றார்.

கோலி சோடா 2 படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடுகிறார். சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ரஃப் நோட் தயாரித்திருக்கிறது. 


Post your comment





Related News
இந்தியன்-2 படத்தில் பிரபல முன்னணி நடிகர் - ஷங்கரின் பலே திட்டம்.!
கோலி சோடா-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!
அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions