பிரபல ஹீரோவுக்கு இயக்குனர் சொன்ன கதை பிடிக்கவில்லையா..?

Bookmark and Share

பிரபல ஹீரோவுக்கு இயக்குனர் சொன்ன கதை பிடிக்கவில்லையா..?

பிரபல நடிகர் கோபி சந்தும், பின்டாஸ் பட புகழ்  பிரபல இயக்குனர் வீரு பொட்லாவும் புதிய படத்திற்காக இணைகிறார்கள் என்ற செய்தி தான் தற்போது டோலிவுட்டின் ஹாட் டாக் ஆகும். இருவரும் சமீபத்தில் சந்தித்து புது படம் பற்றி பேசியதாக கூறப்பட்டது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்த நேரத்தில் இயக்குனர் வீரு பொட்ல இந்த செய்தியை மறுத்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், ஹீரோ கோபி சந்த்தும், நானும் புதிய படத்திற்காக இணைகிறோம் என்ற செய்தி உண்மை இல்லை.

இது சம்பந்தமாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்பட வில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் ஹீரோ கோபி சந்திடம் இருந்து இது சம்பந்தமாக எந்த வித பதிலும் வரவில்லை.

அவருக்கு ஜில் படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது நினைவிருக்கலாம். சமீபத்தில் அவர் தான் அடுத்து நடிக்க இருக்கும் படங்களின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதாக கூறி உள்ளார்.

தற்போது நல்ல கதாசிரியரை பார்ப்பதே அரிதாகி விட்டது என்றும் கூறி இருந்தது நினைவிருக்கலாம். இயக்குனர் வீரு பொட்ல கோபி சந்திடன் சொன்ன கதையில் திருப்தி ஏற்பட வில்லை என்று கூறப்படுகின்றது.


Post your comment





Related News
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions