நாகார்ஜுனா, கார்த்தி படத்திற்கு இசை கோபி சுந்தர்!

Bookmark and Share

நாகார்ஜுனா, கார்த்தி படத்திற்கு இசை கோபி சுந்தர்!

தமிழ் சினிமாவில் தற்போது பல புதிய இசையமைப்பாளர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். முன்னணி இசையமைப்பாளர்கள் பலரும் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார்கள்.

அதிலும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும்தான் அவர்கள் இசையைமக்கிறார்கள். அதனால், பல வளரும் நடிகர்களின் படங்களுக்கும், புதிய நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பு பல புதிய இசையமைப்பாளர்களுக்குக் கிடைத்து வருகிறது.

சமயங்களில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கே யாரை இசையமைப்பாளராகப் போடுவது என்ற குழப்பமும் நிலவி வருகிறது. கார்த்தி, நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க வம்சி பைடிப்பள்ளி தமிழ், தெலுங்கில் இயக்கும் புதிய படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.

இந்தப் படத்திற்காக கோபி சுந்தர் என்ற இசையைமப்பாளரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் மலையாளத்தில் 2006ம் ஆண்டு வெளிவந்த  'நோட்புக்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

தமிழில், விஜய் இயக்கிய "பொய் சொல்லப் போறோம், நந்தனம், யாருடா மகேஷ்,” ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் அவருக்கு இன்னும் பெயர் சொல்லும்படியான படங்கள் வரவில்லை என்றாலும், மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். அங்கு 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமத்திருக்கிறார்.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
உங்க பொண்டாட்டி ட்விட்டரில் இல்லைனு இப்படி செய்யலாமா? - பிரியாவால் சிக்கிய பிரபலம்.!
நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
நிஷா படிப்பிற்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கோபிநாத் பெயரில் மோசடி? உருக்கமான கடிதம்
'அவருக்கு மட்டன் பிடிக்கும். ஆனா, நான் சமைச்சாதானே..!' - நீயா நானா' கோபிநாத் மனைவி துர்கா கலகல
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் இணைந்தார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions