பின்னணி இசைக்காக தேசியவிருதை தட்டிச்சென்ற கோபிசுந்தர்..!

Bookmark and Share

பின்னணி இசைக்காக தேசியவிருதை தட்டிச்சென்ற கோபிசுந்தர்..!

கோபிசுந்தர்.. மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்.. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான '1983' படத்திற்கு இப்போது சிறந்த பின்னணி இசைக்கான விருது வாங்கியதில் எல்லோரின் கவனமும் இவர் மீது திரும்பியிருக்கிறது.

கடந்தவருடம் மட்டும் இவர் 22 படங்களுக்கு பாடல்களுக்கு இசையமைத்தும், பின்னணி இசையமைத்தும் உள்ளார் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். இதில் அனைத்து முன்னணி ஸ்டார்களின் படங்களும் அடக்கம்.  

'1983' படம் அந்த வருடத்திய காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் மீது இளைஞர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை காட்டியது. குறிப்பாக எந்நேரமும் உற்சாகம் தொனிக்கும் பின்னணி இசை படம் முழுவதும் இழையோடி படத்தின் சுவராஸ்யத்திற்கு சுதி கூட்டியது.

படம் வெளியான சமயத்திலேயே அனைவராலும் பாராட்டப்பட்ட, ரசிகர்களால் கொண்டாடப்பட்டது கோபிசுந்தரின் இசை..  கடந்தவருடம் மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டாகிய மலையாளத்தில்  'பெங்களூர் டேய்ஸ்'  படத்துக்கு இசை அமைத்தவரும் இவர்தான்.

இப்போது தமிழில் கார்த்தி-நாகார்ஜுனா நடிக்கும் படம், மற்றும் தமிழில் ரீமேக்காகும் 'பெங்களூர் டேய்ஸ்' படங்களுக்கு இசையமைப்பதன் மூலம் கோலிவுட்டிலும் வலுவாக காலடி எடுத்து வைத்துள்ளார். 


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
உங்க பொண்டாட்டி ட்விட்டரில் இல்லைனு இப்படி செய்யலாமா? - பிரியாவால் சிக்கிய பிரபலம்.!
நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
நிஷா படிப்பிற்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கோபிநாத் பெயரில் மோசடி? உருக்கமான கடிதம்
'அவருக்கு மட்டன் பிடிக்கும். ஆனா, நான் சமைச்சாதானே..!' - நீயா நானா' கோபிநாத் மனைவி துர்கா கலகல
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் இணைந்தார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions