நயன்தாராவுக்கு சிபாரிசு செய்த கோபிசந்த்!

Bookmark and Share

நயன்தாராவுக்கு சிபாரிசு செய்த கோபிசந்த்!

ஜெயம்ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் கோபிசந்த். அந்த படத்தையடுத்து அவர் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாகி விட்டார். தற்போது ஜில் என்ற படத்தில் நடித்து வரும் கோபிசந்த், அடுத்து 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஒரு மெகா படத்தில் நடிக்கிறார்.

தற்போது நயன்தாரா தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டதால் அந்த கதைக்கு அவர்தான் பொருத்தமான நாயகி என்று கதையைக்கேட்ட கோபிசந்த், அடுத்து நயன்தாராவைதான் கமிட் பண்ண சொன்னாராம். அதோடு சம்பள விசயத்தில் அவர் முன்னபின்ன கேட்டாலும கொடுத்து ஓகே செய்ய சொல்லியிருக்கிறாராம்.

இதையடுத்து, நயன்தாராவிடம் கதை சொன்னபோது அவர் தன்னிடமிருந்து நிறைய பர்பாமென்ஸை தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதால் கூடுதலான காட்சிகளை கேட்டாராம்.

அதற்கும் கோபிசந்த் ஓகே சொல்லி அவருக்கு அதிகப்படியான காட்சிகளை வைக்குமாறு டைரக்டரை கேட்டுக்கொண்டுள்ளாராம். இதே படத்தில் மெகா வில்லன் பிரகாஷ்ராஜ் இதுவரையில்லாத அளவுக்கு ஒரு மிரட்டலான கேரக்டரில் நடிக்கிறாராம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions