கவுண்டமணி படப்பிடிப்பு வேகமாக முடிந்தது!

Bookmark and Share

கவுண்டமணி படப்பிடிப்பு வேகமாக முடிந்தது!

செகண்ட் இன்னிங்சில் 49ஓ என்ற படத்தில் நாயகனாக நடித்தார் கவுண்டமணி. விவசாயியாக அவர் நடித்துள்ள அந்த படம் எப்போதோ ரிலீசாக வேண்டியது. ஆனால் அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை.

பின்னர் வாய்மை என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். 49ஓ படத்தில் வேஷ்டி, கோவணம் என்று காஸ்டியூம அணிந்து நடித்த கவுண்டமணி, இந்த வாய்மை படத்தில் கோட்சூட் அணிந்து நடித்துள்ளார்.

ஆனால், இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தும் என்ன காரணமோ இன்னமும் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், அந்த படங்களைத் தொடர்ந்து எங்களுக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்றொரு படத்திலும் நடித்தார் கவுண்டர்.

படப்பிடிப்புகளுக்கு கேரவன் வாடகைக்கு விடுபவராக அவர் நடித்துள்ள அந்த படம் தொடங்கியபோது, அதேபெயரில் அதாவது, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்றொரு பெயரில் இன்னொரு படமும் தயாரானது.

இதனால் கவுண்டமணி படக்குழு அதிர்ச்சியடைந்தது.

ஆனபோதும், அதுபற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். ரிலீஸ் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று வேகமாக படப்பிடிப்பை நடத்தியவர்கள் இப்போது இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் கவுண்டமணி படத்துக்கு போட்டியாக அதே பெயரில் உருவான படமோ இன்னும் படப்பிடிப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆக, இந்த டைட்டில் போட்டி காரணமாக, கவுண்டமணி ஏற்கனவே நடித்து முடித்துள்ள படங்களுக்கு முன்பே இந்த எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் திரைக்கு வந்து விடும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு
செல்பி எடுக்க கேட்ட தொலைக்காட்சி நடிகர்- தன்னுடைய ஸ்டைலில் கவுண்டர் கொடுத்த கவுண்டமணி
இறந்துவிட்டதாக வதந்தி : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்
நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!
புதிய படத்தில் கவுண்டமணி செய்த சாதனை!
கவுண்டமணியின் புதிய பட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சௌந்தரை தட்டி கொடுத்த கவுண்டர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions