செந்திலுக்கு நடிப்பு ஆசையை தூண்டிவிட்ட கவுண்டமணி!

Bookmark and Share

செந்திலுக்கு நடிப்பு ஆசையை தூண்டிவிட்ட கவுண்டமணி!

தமிழ் சினிமாவில் கவுண்டமணி-செந்திலின் காமெடி கூட்டணி நீண்ட காலம் வெற்றிக்கூட்டணியாக திகழ்ந்தது. அவர்கள் நடித்த படங்களென்றால் காமெடிக்கு நூறு சதவிகிதம் கியாரண்டி இருந்தது.

அதனால் அவர்கள் நடித்து வந்தபோது அவர்களது காமெடி ட்ராக்கை எழுதுவதற்கென்றே காமெடி ரைட்டர்களும் இருந்தனர்.அதன்காரணமாக, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை தமிழக சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த அவர்கள், வடிவேலுவின் வளர்ச்சிக்குப்பிறகு படவாய்ப்புகள் குறைந்ததால் அவ்வப்போது ஒரு படத்தில் தலைகாட்டி வந்தனர்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இருவரையும் எந்த படங்களிலும் காண முடியாதநிலை இருந்தது. ஆனால் 49 ஓ படத்தில் திடீரென்று கவுண்டமணி ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

அதையடுத்தும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார். அதைப்பார்த்து. இனிமேல் நடிப்பே வேண்டாம் என்று இருந்து வந்த செந்திலுக்கும் இப்போது நடிப்பு ஆசை ஏற்பட்டிருக்கிறது.

அதனால் கள்ளப்படம் என்ற படததில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர், இப்போது நதிகள் நனைவதில்லை படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இதையடுத்தும், சின்னச்சின்ன கேரக்டர்கள் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக கூறி வரும் செந்திலுக்கு கவுண்டமணியை மாதிரி ஹீரோவாக நடிக்கும் விபரீத ஆசையெல்லாம் துளியும் இல்லையாம். துக்கடா வேடம் கிடைத்தால்கூட போதும் நான் நடிக்கத் தயார் என்று தன்னை சந்திப்பவர்களிடம் கூறிவருகிறார்.


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு
செல்பி எடுக்க கேட்ட தொலைக்காட்சி நடிகர்- தன்னுடைய ஸ்டைலில் கவுண்டர் கொடுத்த கவுண்டமணி
இறந்துவிட்டதாக வதந்தி : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்
நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!
புதிய படத்தில் கவுண்டமணி செய்த சாதனை!
கவுண்டமணியின் புதிய பட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சௌந்தரை தட்டி கொடுத்த கவுண்டர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions