கவுண்டமணி படம் தாமதம் ஏன்?

Bookmark and Share

கவுண்டமணி படம் தாமதம் ஏன்?

பல ஆண்டுகளுக்கு பிறகு கவுண்டமணி ரீ-என்ட்ரியான படம் 49 ஓ. 75 வயதான கவுண்டமணி இந்த படத்தில் ஏழை விவசாயியாக நடித்திருக்கிறார். அதுவும் ஹீரோவாக நடித்துள்ளார்.

இதுதான் அப்படம் வெளியான நேரத்தில் இருந்தே ஹைலைட்டான விசயமாக இருந்து வருகிறது. மேலும், படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் படம் விரைவில் திரைக்கு வரப்போவதாக பரபரப்பு செய்திகள் வெளியிட்டவர்கள்.

பின்னர் சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் சரியான நேரம் பார்த்து ரிலீஸ் பண்ண காத்திருப்பதாக கூறி வந்தனர். ஆனால், படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து பல மாதங்கள் ஆகி விட்டதால் இப்போது தியேட்டர் பிரச்சினை காரணம் போல் தெரியவில்லை.

அதனால் அதுபற்றி அப்பட வட்டாரத்தில் விசாரித்தபோது, தியேட்டர் பிரச்சினை என்பது காரணமல்ல. படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய சிக்கல் உள்ளது. அதனால்தான் படம் தாமதமாகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

அது என்ன பிரச்சினை? என்று கேட்டால், பைனான்ஸ் பிரச்சினைதான். அதிகமான செலவு செய்து படமாக்கினார்கள். ஆனால் கவுண்டமணிக்கு பெரிய மார்க்கெட் இல்லாததால் எதிர்பார்த்தபடி வியாபாரமாகவில்லை. அதுதான் சிக்கலாகியிருககிறது என்கிறார்கள்.


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு
செல்பி எடுக்க கேட்ட தொலைக்காட்சி நடிகர்- தன்னுடைய ஸ்டைலில் கவுண்டர் கொடுத்த கவுண்டமணி
இறந்துவிட்டதாக வதந்தி : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்
நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!
புதிய படத்தில் கவுண்டமணி செய்த சாதனை!
கவுண்டமணியின் புதிய பட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சௌந்தரை தட்டி கொடுத்த கவுண்டர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions