கவுண்டரை துரத்தும் இயக்குநர்

Bookmark and Share

கவுண்டரை துரத்தும் இயக்குநர்

நடிகர் கவுண்டமணி நடிக்கும் படத்தில் சினிமா, அரசியல் என்று செம நக்கல், நய்யாண்டி செய்வது அவருக்கு கைவந்த கலை. தற்போது வாய்மை, 49ஓ படங்களைத் தொடர்ந்து எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்திற்காக ரூ. 70 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், இதற்கடுத்து அவர் கதாநாயகனான நடிக்க இரு படங்களின் இயக்குநர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

அதில் ஒன்று போலீஸ் கதையாம். அந்த கதையில் விஜயகாந்த், அர்ஜூன் போன்ற ஆக்சன் நடிகர்கள் நடிப்பது போன்று இருப்பதை அறிந்து, இந்த உடம்பு இருக்கிற நிலையில் நான் சண்டை போட முடியாது என்றார்.

இருப்பினும், அந்த படத்தில் கவுண்டமணியை போலீஸ்காரராக நடிக்க வைத்தே தீருவது என்று அந்த டைரக்டர் விடாமல் துரத்தி வருகிறாராம்.


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு
செல்பி எடுக்க கேட்ட தொலைக்காட்சி நடிகர்- தன்னுடைய ஸ்டைலில் கவுண்டர் கொடுத்த கவுண்டமணி
இறந்துவிட்டதாக வதந்தி : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்
நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!
புதிய படத்தில் கவுண்டமணி செய்த சாதனை!
கவுண்டமணியின் புதிய பட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சௌந்தரை தட்டி கொடுத்த கவுண்டர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions