முதல்முறையாக கேரவனுக்குள்ளேயே படமான பாடல் காட்சி!

Bookmark and Share

முதல்முறையாக கேரவனுக்குள்ளேயே படமான பாடல் காட்சி!

ஓடும் பஸ்சில், ரயிலில், பறக்கும் விமானத்தில் கூட முழு பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். முதன் முறையாக ஒரு கேரவனுக்குள்ளேயே முழு பாடலையும் எடுத்திருக்கிறார்கள்.

கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படத்திற்காக இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது. கதைப்படி கவுண்டமணி சினிமா கம்பெனிகளுக்கு கேரவன் வாடகைக்கு விடுகிறவர். 

அதோடு காதலர்களையும் சேர்த்து வைக்கிறவர். மதுரையிலிருந்து தப்பி ஓடிவரும் காதலர்களை அவர்களது பெற்றோர்களுடன் சேர்த்து வைப்பதற்காக தனது ஆட்களுடன் காதலர்களை கேரவனில் மதுரைக்கு அழைத்துச் செல்வார். 

அப்போது இந்த பாடல் வருகிறது. இது குறித்து இயக்குனர் கணபதி பாலா கூறுகையில் "ஏதாவது புதிதாக செய்யலாமே என்று தோன்றியபோது இந்த யோசனை வந்தது.

17 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட கேரவனிலேயே பாடலை எடுத்தோம். இசை அமைப்பாளர் அருணகிரியின் இசையும், ஒளிப்பதிவாளர் கண்ணனின் உழைப்பும் இந்த பாடலில் தெரியும்" என்கிறார்.


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு
செல்பி எடுக்க கேட்ட தொலைக்காட்சி நடிகர்- தன்னுடைய ஸ்டைலில் கவுண்டர் கொடுத்த கவுண்டமணி
இறந்துவிட்டதாக வதந்தி : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்
நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!
புதிய படத்தில் கவுண்டமணி செய்த சாதனை!
கவுண்டமணியின் புதிய பட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சௌந்தரை தட்டி கொடுத்த கவுண்டர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions