விவசாயமும், விவசாயிகளும் அழியவிடக் கூடாது! -ஆடியோ விழாவில் கவுண்டமணி பேச்சு

Bookmark and Share

விவசாயமும், விவசாயிகளும் அழியவிடக் கூடாது! -ஆடியோ விழாவில் கவுண்டமணி பேச்சு

39 வருடங்களில் 500 படங்களில் நடித்திருக்கும் கவுண்டமணி 49 ஓ படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. 

விழாவில், கவுண்டமணி, சிவகார்த்திகேயன், சத்யரஜ், எஸ்.தாணு, ஸ்ரீனிவாசன், கே.ராஜன், இசையமைப்பாளர் கே, யுகபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் எல்.சிவபாலன் தயாரித்துள்ள இந்த படத்தை ஆரோக்யதாஸ் இயக்கியிருக்கிறார்.

விழாவில் கவுண்டமணி பேசுகையில்,  எனக்கு முன்னாடி என்னைவிட சிறந்த காமெடியன்களான சத்யராஜ்-சிவகார்த்திகேயன் இருவரும் பேசிவிட்டனர். ரொம்ப அழகாக பேசினார்கள்.

அதனால் எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என்று ஆரம்பித்தவர், எல்லோரும் டாக்டர் பட்டத்தை கெஞ்சி கூத்தாடி சைடுல ஏதாச்சும் கொடுத்துதான் வாங்குவாங்க. ஆனா இந்த படத்தோட புருடியூசர் சிவபாலன் எனக்கு டாக்டர் பட்டத்தை வாரி வழங்கி விட்டார். 

இந்த படத்தோட டைரக்டர் ஆரோக்யதாஸ் எங்கிட்ட வந்து கதை சொல்லி கால்சீட் கேட்டு ஒரு வருசமாக அலைஞ்சாரு. வருவாரு போவாரு கதைய சொல்வாரு. நான் ஒருநாள் சொன்னேன்.

கதையில முன்னாலயும், பின்னாலயும் கட் பண்ணிட்டு நடுவுல ரெண்டே லைன் மட்டும் சொல்லுங்க என்றேன். அவர் சொன்னது எனக்கு பிடிச்சிருந்தது. நடிக்க ஒத்துக்கிட்டேன். 

இந்த படத்தோட தயாரிப்பாளரான சிவபாலனை பாராட்டனும். ஏன்னா கும்மாங்குத்து, சும்மாங்குத்துன்னு கமர்சியல் படங்கள் வந்துக்கிட்டிருக்கிற நேரத்துல இந்த மாதிரி விவசாயம் சம்பந்தப்பட்ட ஒரு நல்ல படத்தை தயாரிக்க முன்வந்த துக்கும், இந்த கதைய எழுதிய இளம் டைரக்டர் ஆரோக்யதாஸ் ரொம்ப முற்போக்கான டயலாக்கெல்லாம் எழுதியிருக்காரு. அதுக்காக அவரையும் சேர்த்து நான் பாராட்டுறேன். அப்புறம் மியூசிக் டைரக்டர் கே. அவரோட பெயருக்கு தகுந்த மாதிரியே கேட்கிற மாதிரி மியூசிக் போட்டிருக்காரு. 

பாடலாசிரியர் யுகபாரதி, இந்த படத்துக்கு என்ன எழுதனுமோ அதை எழுதியிருக்காரு. அப்புறம் கேமராமேன் கருப்பையான்னு பேரு ஆனா படத்தை நல்ல கலர்புல்லா எடுத்திருக்காரு. அப்புறம் இந்த படத்தோட டான்ஸ் மாஸ்டர் சங்கர் என்னையும் ஆட வச்சிருக்காரு. 

விவசாயம் இல்லேன்னா உலகம் ஏதடா உயிர் ஏதடா, பல கட்டிடங்கள் உருவாக வயல்காட்டை அழிச்சாங்க -இதுதான் இந்த படத்தோட கதை. விவசாயம் நாட்டுல அவசியம் தேவை. விவசாயம் இல்லேன்னா நாம உயிரோடவே இருக்க முடியாது. விவசாயமும், விவசாயிங்களும் அழியக்கூடாது அப்படிங்கிற ஒரு புரட்சிகரமான கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. 

விவசாயிகளுக்கு அந்த மண்ணுதான் உடல், உயிர், மானம், கெளரவம், எல்லாமே. ஒரு வருசம் விளையல அதனால நிலத்தை வித்துட்டேன்னு சொல்லக்கூடாது.

ஒரு வருஷம் விளையலேன்னா அடுத்த வருஷம் விளையும். அரசியல்வாதி, ரியல் எஸ்டேட், கார்ப்பரேட் கம்பெனி இவங்க விவசாயிகிட்ட தேடி வர்றாங்க. எதுக்கு வர்றாங்க. 
அந்த நிலத்துல கால் ஏக்கராவது வாங்கிடலாமின்னு வர்றாங்க.

அந்த நேரத்துல தான் விவசாயிங்க ஏமாந்திடக்கூடாது. சிலர் காசுக்கு ஆசைப்பட்டு வித்திடுறாங்க. அந்த இடத்துல பெரிய கட்டிடம் வந்திடுது. இப்படி ஒவ்வொரு விவசாயிங்களும் நிலத்தை விற்க, கட்டிடங்களா வந்துக்கிட்டே இருந்தா விவசாயம் செய்ய எங்க நிலம் இருக்கும். 

நாம எப்படி சாப்பிட முடியும். அதனால் விவசாயிகள் நிலத்தை விற்ககூடாது. விவசாயிகள் விவசாயிகளாகத்தான் இருக்கனும் அப்படின்னு சொல்ற படம்தான் இந்த 49 ஓ. இது நம்ம ஊர் விவசாயிங்களுக்கு மட்டும் சொல்ற கதை இல்லை.

இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என எல்லா நாட்டு விவசாயிங்களுக்குமான படம். நம்ம ஊர் விவசாயி வேட்டி கட்டியிருக்கான். அமெரிக்காகாரன் பேண்ட் போட்டுக்கிட்டு வேலை செய்றான். இதுதான் வித்தியாசம். ஆனா விசயம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். 

இந்த 49 ஓ படத்தை எல்லாதரப்பினரும் பார்க்கலாம். ஏ கிளாஸ், பி கிளாஸ், சி கிளாஸ் என்று பிரிக்க முடியாது. ஏ டு இசட் என அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படம். 49 ஓ இஸ் பெஸ்ட் மூவி.

இது ஒரு நல்ல படம். எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.அப்புறம் 49 ஓ என்றால் என்ன? நாம யாருக்கு ஓட்டுப்போடுறோம். எதுக்கு போடுறோம். ஓட்டு போடுவதால் என்ன நன்மை? போடனுமா? வேண்டாமா? அதுக்கெல்லாம் இந்த படத்தில் விளக்கம் கொடுத்திருக்கேன். 49 ஓ இஸ் பெஸ்ட் மூவி. இது ஒரு நல்ல படம்”. இவ்வாறு தன்னுடைய நகைச்சுவை பாணியில் பேசி முடித்தார் கவுண்டமணி.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions