கவுண்டமணிக்கு காத்திருக்கும் கோலிவுட் நடிகர்கள்!

Bookmark and Share

கவுண்டமணிக்கு காத்திருக்கும் கோலிவுட் நடிகர்கள்!

39 வருட சினிமா பயணத்தில் 500 படங்களில் நடித்து சாதனை படைத்த கவுண்டமணி 75 வயதுக்கு பிறகும் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்பது ஆச்சர்யம் தான். அதோடு, அவரை காக்கி சட்டை போட்டு போலீஸ் வேடத்தில் நடித்தே ஆக வேண்டும் என்ற ஒரு டைரக்டர் மாதக்கணக்கில் துரத்திக்கொண்டிருப்பது அதற்கடுத்த ஆச்சர்யம்.

இப்படி கவுண்டமணியை பல ஆச்சர்யங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மேலும், சில நடிகர்கள் காலகட்டத்திற்கேற்ப கேரக்டர் ரீதியாக மாறிக்கொண்டேயிருப்பார்கள்.

ஆனால் கவுண்டமணி அப்படியல்ல. ஆரம்ப காலத்தில் எப்படி படப்பிடிப்பு தளங்களில் தான் இருக்குமிடத்தை கலகலப்பாக்கிக்கொண்டு வந்தாரோ, அதேபோன்று தற்போது தான் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களில் ஜாலியாக இருக்கிறார்.

இளவட்ட நடிகர் நடிகைகளை விட்டு விலகி நிற்காமல், அவர்களுடன் அமர்ந்து கேலி கிண்டல் என்று தனது கவுண்டர்களை கொடுத்துக்கொண்டேயிருக்கிறாராம். அந்த கேலி கிண்டலை அவர் படங்களிலும் தொடர்ந்திருக்கிறார். குறிப்பாக, காமெடியில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளையும் கலாய்த்திருக்கிறாராம். 

அதோடு எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் கோலிவுட்டில் இளவட்ட நடிகர்களையும் செமயா வாரியிருக்கிறாராம் கவுண்டர். இந்த விஷயம் சம்பந்தப்பட்ட நடிகர்களின் காதுகளை எட்டியபோதும் யாருமே அதை நினைத்து கோபித்துக்கொள்ளவில்லை.

மாறாக, கவுண்டர் நம்மளை எப்படி கலாய்த்திருக்கிறார் என்பதை பார்ப்போமே என்று அந்த படத்தின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள் கோலிவுட் நடிகர்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions