இயக்குனர் கௌரவுக்கு ஆண் குழந்தை

Bookmark and Share

இயக்குனர் கௌரவுக்கு ஆண் குழந்தை

‘தூங்கா நகரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கௌரவ். இப்படத்தில் விமல் நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடித்திருந்தனர்.

இப்படம் மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் மையமாக வைத்து உருவானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதும் இப்படத்திற்கு கிடைத்தது.

இப்படத்தையடுத்து விக்ரம் பிரபுவை வைத்து ‘சிகரம் தொடு’ படத்தை இயக்கினார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மோனல் கஜ்ஜார் நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ்ஜும், இயக்குனர் கௌரவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தனர்.

தந்தை, மகன் உறவைப் பற்றியும், ஏடிஎம் கொள்ளையை மையமாக வைத்தும் இப்படம் உருவான இப்படமும் நன்றாக ஓடியது.

அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் கௌரவ்விற்கு புது மகிழ்ச்சியாக அழகான ஆண் குழந்தை இன்று பிறந்துள்ளது. இது குறித்து அவர் கூறும்போது, ‘கடவுள் ஆசிர்வாதத்தால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் மகனும் தற்போது நலமாக இருக்கிறார்கள்.

என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாளாக இந்நாள் அமைந்துள்ளது’ என்றார்.

கௌரவ் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாக்க இருக்கிறாராம். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions