கௌதம் கார்த்திக் எங்கே?

Bookmark and Share

கௌதம் கார்த்திக் எங்கே?

கடந்த சில வருடங்களில் தமிழ் சினிமாவில் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் அறிமுகமாகியுள்ளனர். இயக்குனர்களின் வாரிசு, நடிகர்களின் வாரிசு என பல பேர் நாயகர்களாக மட்டுமே அறிமுகமானார்கள். 

எதிர்காலத்திலும் இது இன்னும் அதிகமாகவே இருக்கும். என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையும், நல்ல படமும் அமைந்தால் மட்டுமே அவர்களால் நிலைத்து நிற்க முடியும்.  

80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கிடையில் இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகராக இருந்தவர் கார்த்திக். அவருடைய வாரிசான கௌதம் கார்த்திக் இயக்குனர் மணிரத்னம் மூலம் கடல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அப்படம் தோல்வியடைந்த்தது.

அடுத்தடுத்த படங்களில் அவர் எழுந்து நிற்பார் என்று பார்த்தால், அதன் பின் வெளிவந்த படங்களும் அவருக்குத் தோல்வியாகவே அமைந்தது. கடல் படத்திற்குப் பின் கௌதம் கார்த்திக் நடித்த “என்னமோ ஏதோ, வை ராஜா வை” ஆகிய படங்களும் தோல்விப் படங்களாகவே அமைந்தன. 

சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடித்த படமும் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிறுத்தப்பட்டுவிட்டது. 

கௌதம் தற்போது கதாநாயகனாக நடித்து வரும்ரங்கூன், இந்திரஜித் படங்களைப் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. அந்தப் படங்களின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறதா அல்லது அவையும் நிறுத்தப்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை. நல்ல இயக்குனரிடம் கௌதம் கார்த்திக் நடித்தால் மட்டுமே அவருக்குத் திருப்புமுனையாக அமையும் என்பது அவருடைய அப்பா கார்த்திக்கு தெரியாதா என்ன...?.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions