கெளதம்மேனனை காப்பியடித்த சந்தானம்!

Bookmark and Share

கெளதம்மேனனை காப்பியடித்த சந்தானம்!

சந்தானம் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே அவருக்கான காட்சிகளை இயக்குனர்கள் ஸ்கிரிப்ட் பண்ணுவதில்லையாம். அவர் சம்பந்தப்பட்ட காட்சியை சந்தானம் காமெடி என்று மட்டுமே எழுதி வைத்திருப்பார்களாம்.

அதையடுத்து, சந்தானத்திடம் மொத்த கதையையும் சொன்ன பிறகு அவர்தான் அந்த இடங்களில் காமெடி காட்சியை தனது உதவியாளர்களை வைத்து உருவாக்குவாராம்.

அப்படி தனக்கான காமெடி இலாகாவை ஏபிசி என்று மூன்றாக பிரித்து வைத்திருக்கிறாராம். இவர்கள் அனைவருமே சந்தானத்தை பின்னால் இருந்து இயக்குகிறார்களாம். இதை இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்தார் சந்தானம்.

மேலும், நான் எனது படங்களில் காமெடி காட்சிகளை பெரும்பாலும் கற்பனையாக உருவாக்குவதில்லை. என்னை பாதித்த சிலரை முன்வைத்தும், அவர்கள் பேசும் பாணியை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்பவும் காமெடி செய்வதுண்டு.

அந்த வகையில், நான் பல படங்களில் ப்ரோ என்ற வார்த்தையை போட்டு டயலாக் பேசியிருக்கிறேன். அது எனக்கு தோன்றியது அல்ல. டைரக்டர் கெளதம்மேனன் மற்றவர்களிடம் பேசும்போது ப்ரோ என்றுதான் சொல்வார்.

அதை பலமுறை வாட்ச் பண்ணி வந்த எனக்கு, நாம் ஏன் இந்த ப்ரோ என்பதை யூஸ் பண்ணக்கூடாது என்றுதான் சில படங்களில் பயன்படுத்தினேன். ஆக, இந்த ப்ரோவை நான் கெளதம்மேனனிடமிருந்துதான் காப்பியடித்தேன் என்று அவர் முன்னிலையிலேயே தெரிவித்துக்கொண்டார் சந்தானம்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions