மலையாளப் படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் கவுதம் மேனன்!

Bookmark and Share

மலையாளப் படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் கவுதம் மேனன்!

மலையாளத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கவிருக்கும் ‘ஜேக்கப்பின் சொர்க்க ராஜ்ஜியம்’ படத்தில் கவுதம் மேனன் நடிக்கிறார். நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகனின் அண்ணன் வேடத்தில் கவுதம் மேனன் நடிக்கிறார்.

தனது படங்களில் பாடல் காட்சிகள் அல்லது ஏதாவது ஒரு காட்சியில் நடிக்கும் இயக்குனர் கவுதம் மேனன் இப்போது மலையாள படத்தில் நடிப்பது ஏன் என்று கேட்ட போது, ‘‘எனக்கு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய எல்லா படங்களும் பிடிக்கும்.

அவர் என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய படத்தில் நான் நடிக்க வேண்டும் என்றார். உங்களுக்காகவே என் படத்தில் ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார்.

வினீத் ஸ்ரீனிவாசன் என்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துக் கேட்டுக் கொண்டதால் என்னால் தவிர்க்க முடியவில்லை. இது மட்டுமல்ல, ஒரு மலையாள படக்கழுவினருடன் சேர்ந்து பணி புரிய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இதனால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’’ என்று விளக்கம் கொடுத்தார்.

 

 

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions