கௌதம் மேனன் இயக்கத்தால் சிம்புக்கு கிடைத்த அற்புத வாய்ப்பு

Bookmark and Share

கௌதம் மேனன் இயக்கத்தால் சிம்புக்கு கிடைத்த அற்புத வாய்ப்பு

சிம்பு தன் படத்தில் எப்படியும் ஒரு பாடல் பாடிவிடுவார்,கெளதம் மேனனும் தான் இயக்கும்படத்திற்கு பெருமளவில் ரஹ்மானே இசை அமைக்கிறார். அதனால் ரஹ்மான் இசைத்து கெளதம் மேனன் இயக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றைப் பாட இருக்கிறார் சிம்பு.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை தனது ‘போட்டோன் கதாஸ்’ நிறுவனம் மூலம் கெளதம் மேனன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இன்று (செப்.15) முதல் துவங்க இருக்கிறது. தொடர்ச்சியாக 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். படத்தில் மொத்தம் 6 பாடல்கள். இதற்காக 4 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்து, படக்குழுவும் படமாக்கிவிட்டது.

தற்போது 5வது பாடலைக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்பாடலுக்கு இசையை முடிவு செய்து, வேறு ஒருவரைப் பாட வைத்து படப்பிடிப்புக்காக கொடுத்திருக்கிறார் ரஹ்மான். விரைவில் நடைபெறவிருக்கும் பாடல் பதிவில் அப்பாடலைப் பாடவிருக்கிறார் சிம்பு.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிம்பு பாடவிருக்கும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே ‘காதல் வைரஸ்’ படத்தில் “பாய்லா மோர்” பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்தவுடன், படத்தைப் பார்த்துவிட்டு 6-வது பாடலுக்கு இசையமைக்க முடிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். யாரு பாடுனா என்ன பாஸ் ரஹ்மான் இசையே தனி ரகம்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions