விக்ரமை போலீசாக்கும் கெளதம்மேனன்!

Bookmark and Share

விக்ரமை போலீசாக்கும் கெளதம்மேனன்!

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தை இயக்கிய கெளதம்மேனன், அதைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார்.

சமீபகாலமாக தான் நடிக்கிற படங்கள் தியேட்டருக்கு வரமுடியாமல் தவித்துக்கொண்டிருப்பதால், கெளதம்மேனனின் ராசி தன்னை காப்பாற்றி கரை சேர்த்து விடும் என்ற நம்பிக்கையில் இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சிம்பு.

மேலும், சிம்பு நடிக்கும் இந்த படத்தை ஏற்கனவே தொடங்கிய கெளதம்மேனன், பின்னர் தான் அஜித்தை இயக்க சென்று விட்டநிலையில், தனக்காக சிம்பு பொறுமையாக காத்திருந்ததால் அவருக்கு இந்த படத்தை இன்னொரு விண்ணைதாண்டி வருவாயா படமாக கொடுத்து விட வேண்டும் என்றும் மெனக்கெட்டு வருகிறார்.

இந்நிலையில், அச்சம் என்பது மடமையடா சிறிய பட்ஜெட் படம் என்பதால், இன்னும் ஓரிரு மாதத்தில் அப்பட வேலைகள் முடிந்து விடுமாம். அதையடுத்து, விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கெளதம்மேனன்.

ஏற்கனவே சூர்யாவுக்காக தான் ரெடி பண்ணி, கடைசி நேரத்தில் அவர் நடிக்க மறுத்த துருவ நட்சத்திரம் படத்தின் கதையை விக்ரமுக்காக சில மாற்றங்களை செய்து இயக்கப்போகிறாராம்.

இந்த படத்தில் விக்ரம் போலீஸ் வேடத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சாமியில் ஆறுச்சாமியாக கலக்கிய விக்ரம், இந்த படத்தில் இன்னொரு பரிமாணத்தில் வெளிப்படப்போகிறாராம்.


Post your comment





Related News
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
வைபவியை தாய்லாந்து அழைத்து செல்லும் கௌதம் கார்த்திக்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?
விக்ரமுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்?
காத்திருப்பில் வைத்த நயன் - கடுப்பான கெளதம் மேனன்
விருது விழாவில் உருவான விக்ரம் – கௌதம் மெகா கூட்டணி!
24 படத்தின் மிரட்டலான முதல் 2 நாள் வசூல் விவரம்!
அப்பா, மகனாக நடிக்கும் கார்த்தி-கெளதம்
கௌதம் மேனனின் திறமை!
முத்தக்காட்சிக்கு நோ” சொல்லும் சிம்புவின் நாயகி மஞ்சிமா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions