என்றும் நான் கமல் ரசிகை: கவுதமி

Bookmark and Share

என்றும் நான் கமல் ரசிகை: கவுதமி

கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படம் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டு உள்ளது. படத்தின் தெலுங்கு பட பாடல் கேசட் வெளியிட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். 

விழாவில் கமலஹாசன், படத்தின் கதாநாயகிகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஸ்ரீராம், தெலுங்கு பட விநியோகஸ்தர் கல்யாண், கமல் மகள் சுருதி ஹாசன், கவுதமி மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

நடிகர் கமலஹாசன் பேசும் போது ‘‘இயக்குனர் கே.விசுவநாத் இயக்கத்தில் சாகர சங்கமம், சுவாதி முத்யம் படத்தில் நடித்தேன். அவரது இயக்கத்தில் நடிக்கும் எந்த நடிகரும் என்னை போல் வருவார்கள்.

எனது குரு பாலச்சந்தருக்காக நான் எழுதிய தமிழ் கவிதையை தெலுங்கில் மொழி பெயர்க்கும் வகையில் நான் திறமையானவன் அல்ல. அதை தெலுங்கில் மொழி பெயர்த்த ராம ஜோசய்யா சாஸ்திரிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் நடிகை கவுதமி பேசியதாவது:– நான் எத்தனையோ படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளேன். வாழ்க்கையில் எத்தனையோ கட்டங்களை தாண்டி வந்து உள்ளேன். எனது அபிமான நடிகர் கமலஹாசன் தான். அன்றும், இன்றும் என்றும் நான் அவரது ரசிகை. 

இவ்வாறு கவுதமி பேசினார். 

சுருதி ஹாசன் பேசும் போது, நான் இந்த படத்தை பார்த்தேன். மிக சிறந்த படங்களில் ஒன்றாக இது அமையும் என்றார். இயக்குனர் ரமேஷ் அரவிந்த் பேசும் போது, ‘‘கமல் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல விருந்தாக அமையும்’’ என்றார். விழாவில் நடிகர் கமலஹாசனும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இணைந்து கமல் நடித்த தமிழ், தெலுங்கு, இந்தி பட பாடல்களில் சிலவற்றை பாடினார்கள். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions