மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாமில் கவுதமி பங்கேற்பு

Bookmark and Share

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாமில் கவுதமி பங்கேற்பு

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான முனையத்தில் விமான நிலைய ஆணையகம் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை நடிகை கவுதமி தொடங்கிவைத்தார்.

இதில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் சவுமியா அன்புமணி, விமான நிலைய ஆணையக இயக்குனரின் மனைவி சியாமவுலி சாஸ்திரி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களிடம் மார்பக புற்றுநோய் குறித்து விளக்கி கூறப்பட்டது. பின்பு நடிகை கவுதமி பேசுகையில் கூறியதாவது:-

‘ஆரோக்கியமான உணவு உள்பட பல்வேறு காரணங்களால் புற்றுநோய் தடுக்கப்பட்டு வருகிறது. பல வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நவீன முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் நானும் ஒருவர். பெண்கள் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டால்தான் ஆரம்ப நிலையை கண்டறிந்து குணமாக்க முடியும். எனவே பெண்கள் விழிப்புணர்வுடன் பரிசோதனை மேற்கொண்டு வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற வேண்டும்’.
இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
கமலை விட்டு பிரிவது ஏன்? நடிகை கெளதமி விளக்கம்
தமிழ், இந்தியில் திரிஷ்யம்: கமல், அஜய் தேவ்கான் படங்கள் போட்டி
த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக கெளதமி..!
மார்பகப் புற்றுநோயற்ற உலகை உருவாக்க அணைவரும் முன்வரவேண்டும் : நடிகை கவுதமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions