
இந்தியாவின் ஒட்டு மொத்த திரையுலகமும் ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி போன்ற பிரச்சனைகளால் மிகள் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறது.
ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை வரி பிரச்சனைகளால் ரூ 150க்கு விற்கப்பட்ட சினிமா டிக்கெட் விலை தற்போது ரூ 170 க்கு விற்கப்படுகிறது.
இதனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் மிகவும் குறைந்து விட்டதாகவும், டிக்கெட் விலை காரணமாக பலரும் திருட்டு இணையதளங்களை நோக்கி பயணிப்பதாகவும் தெலுங்கு திரையுலகின் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் டிக்கெட் விலை , ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை வரி பிரச்சனைகளை எதிர்த்து போராட்டம் நடத்த தெலுங்கு திரையுலகினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்கு தமிழ் திரையுலகினரும் ஆதரவு அளித்து போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
Post your comment