முத்த மழையில் நனையும் ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

முத்த மழையில் நனையும் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டன.

இதில் ‘முத்தம் கொடுத்த மாயக்காரி’ என்ற பாடலில் மனிஷா யாதவோடு சேர்ந்து ஜி.வி.பிரகாஷ், இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமான குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இப்பாடல் முழுக்க மனிஷா யாதவ், ஜி.வி.பிரகாஷுக்கு முத்த மழை பொழிந்துள்ளார் என்பதுதான்.
மேலும், மற்றொரு பாடலான ‘பிட்டு படம்டி பிட்டு படம்டி’ என்ற பாடலுக்கும் ஜி.வி.பிரகாஷ் பயங்கரமான குத்தாட்டம் போட்டுள்ளார். ‘என்னாச்சு ஏதாச்சு’ என்ற மெலோடி பாடல்கள் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் விதமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் இப்படம் இருக்கும் என்று கூறினர்.

இப்படத்தில் மனிஷா யாதவ், ‘கயல்’ ஆனந்தி என இரண்டு நாயகிகள்தான் ஹீரோயின்கள் என்று நினைத்திருந்த நிலையில், படக்குழுவினர், நான்கு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்திருப்பதாக அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தனர். முக்கிய வேடத்தில் சிம்ரனும், சிறப்புத் தோற்றத்தில் ப்ரியா ஆனந்தும் நடித்திருப்பதைத்தான் அவர்கள் அவ்வாறு கூறினர். 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions