போலீசில் புகார் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்

Bookmark and Share

போலீசில் புகார் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘பென்சில்’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். மணிநாகராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் பல பிரச்சனைகளை கடந்து ஒரு வழியாக வெள்ளியன்று வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், இப்படம் வெளியான ஒருசில மணி நேரங்களில் ஒரு இணையதளத்தில் படம் வெளியாகியிருக்கிறது. இதை அறிந்த தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் சென்னை காவல் துறையினர்களிடம் ஜி.வி.பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் புகார் கொடுத்துள்ளார்கள்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, ‘எங்கள் நிறுவனம் தயாரித்து ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வெள்ளியன்று (13.05.2016) வெளியான 'பென்சில்' திரைப்படத்தின் திருட்டு விசிடி இன்று (14.05.2016) இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தயவு கூர்ந்து இதை தடுக்க தக்க ஆவணம் செய்யுமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். www.tamilrockers.co என்ற இணையதளத்தில் எங்கள் படம் வெளியாகியுள்ளது’. இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions