ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய ஜி.வி.பிரகாஷ்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படம் சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படமும் வெற்றி பெற்றது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தற்போது இவர் ‘புரூஸ் லீ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய படத்தை ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கவுள்ளார்.

‘டார்லிங்’ படம் போல் திகில் படமாக உருவாக்க இருக்கிறார்கள். மேலும் ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்தை தவிர ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions