ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாகும் பிரபல ஹீரோயின்கள்!

Bookmark and Share

ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாகும் பிரபல ஹீரோயின்கள்!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் காட்டில் தற்போது அடை மழைதான். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அதில் ஒன்று, ‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் ஆனந்தியுடன் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், எம்.ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகும், இப்படத்தின் கதாநாயகி தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா ஆனந்த் இருவரும் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

பிரியா ஆனந்த் ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். அதேநேரத்தில், கீர்த்தி சுரேஷும் இன்னொரு கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இருவருக்கும் சமமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.

இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கிறது. இது ஒரு பாலிவுட் படத்தைப் போன்ற சாயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions