
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை கதை கொஞ்சம் விவகாரமானதாக இருந்தாலும் இளைஞர்களிடம் அதிகமான வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷும் - ஆதிக் ரவிச்சந்திரனும் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்கவிருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் என்ற நிறுவனத்தின் சார்பில் ஸ்டீபன் தயாரிக்கவிருக்கிறார். தற்போது இப்படத்தின் கதாநாயகி மற்றும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
‘த்ரிஷா இல்லனா நயன்தரா’ படத்தை முடித்த கையோடு ஆதிக் தற்போது சிம்புவை வைத்து 'AAA' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி.யும் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். எனவே, இருவரும் தங்கள் படங்களை முடித்த பிறகு இப்படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
Post your comment