ராஜேஷ் - ஜி.வி.பிரகாஷ் இணையும் 'கடவுள் இருக்கான் குமாரு'

Bookmark and Share

ராஜேஷ் - ஜி.வி.பிரகாஷ் இணையும் 'கடவுள் இருக்கான் குமாரு'

புதுமுக இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் படம் “புரூஸ்லி”. இப்படத்தைத் தொடர்ந்து ராஜேஷ்  இயக்கத்தில் அடுத்து ஹீரோவாக நடிக்கவிருப்பதும் உறுதியாகியிருக்கிறது.

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்திற்குப் பிறகு ராஜேஷ் அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துவிட்டாராம். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு “ கடவுள் இருக்கான் குமாரு” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான கலைஞர்கள் தேர்வு மற்றும் பிற வேலைகள் தொடங்கி நடந்துவருகிறது. புரூஸ்லி படப்பிடிப்பு முடிந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் ஜி.வி.கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமான படம் டார்லிங். அடுத்து வெளியான படம் “ த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”, அடுத்து வெளியாகவிருப்பது புரூஸ்லி. இவ்வாறு படங்களின் பெயர்கள் முறையே,  ஒரு வார்த்தை தலைப்பு அடுத்த படம் மூன்று வார்த்தையில் தலைப்பு என்று மாறி மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இயல்பாக அமைகிறதா? அல்லது  சென்டிமெண்டாக இப்படி வைக்கிறார்களா? என்று தற்பொழுது கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions