சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் சூர்யா 37 படத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். 

இந்த இரு படங்களை முடித்த பிறகு சூர்யா, `இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யா படம் குறித்து பேசிய ஜி.வி.பிரகாஷ், சூர்யா 38 படம் ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஒரு வித்தியாசமான கதையாக உருவாக இருப்பதாகவும், இந்த படத்தின் இசையும் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சுதா கொங்காரா, ஜி.வி.பிரகாஷ் எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி சூர்யா படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி
நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions