ஜி.வி.பிரகாஷ் பாடல்களை வெளியிடும் அக்‌ஷய் குமார்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் பாடல்களை வெளியிடும் அக்‌ஷய் குமார்!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி வெற்றி படங்களை கொடுத்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளது.

கைவசம் நான்கைந்து படங்களை வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது பிசி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார் கலந்துக் கொள்ள இருக்கிறார்.

அக்‌ஷய் குமார் தற்போது சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரஜினியின் ‘2.0’ படத்தையும், ஜி.வி.பிரகாஷின் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். மேலும் நிரோஷா, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions