இயக்குனராக மாறிய ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

இயக்குனராக மாறிய ஜி.வி.பிரகாஷ்!

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ படம் மூலம் நடிகரானார். அந்த படத்தின் வெற்றியால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. இவர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ படமும் வெற்றி பெற்றதால் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.

தற்போது அவர் ‘புரூஸ் லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் ஜி.வி.பிரகாஷ் இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். மேலும் படத்திற்குள் படம் எடுப்பது போலவும், அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிகை கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த படத்தில் நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சிங்கம்புலி, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions