தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய ஜி.வி.பிரகாஷ்!

இன்றைய இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று 10 பேரை வைத்து தானாகவே கூவிக் கொண்டிருக்கும் ஜி.வி.க்கு மட்டும் எப்படி படங்கள் குவிந்து கொண்டிருக்கிறது என்று பலரும் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.

ஏம்பா அசுற வேகத்தில் வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனை அடுத்த படத்தை சரியானதாக இருக்குமா இருக்காதா என யோசித்துதான் அக்ரிமெண்டில் கையெழுத்து போடுகிறாராம். ரெமோ படத்தில் அவரை கமிட் செய்ய பாக்யராஜ் கண்ணன் கிட்டத்தட்ட 2 வருடங்கள் காத்திருந்ததும் நாம் அறிந்ததே.

ஆனால் இசையமைப்பாளராக இருந்த ஜி.வியை நீ ஏண்டா ஹிரோ ஆகக்கூடாது என்று யாரோ சொரிந்துவிட இன்னமும் அதை சொறிந்து கொண்டுதான் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்த படங்களின் பூஜைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இவருக்கு எப்படி இந்த வாய்ப்புகள் என்று விசாரித்ததில் கிடைக்கும் தகவல் ஆஹா ஓஹோ... தான்...

தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் கதை கேட்டு பிடித்துவிட்டால் இயக்குநர் தயாரிப்பாளரை தேடி அலைய வேண்டியதில்லை. நேராக ஜி.வி.பிரகாஷ் களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட இயக்குநருக்காக முழு மூச்சாக ஒரு கம்பெனியில் விடிய விடிய உட்கார்ந்து கூட தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்துவிடுகிறாராம்.

(பின்னே முன்னணி இசையமைப்பாளர் வந்து கேட்டா இல்லைன்னா சொல்ல முடியும்) வேற வழியில்லாமல் தயாரிப்பாளர்களும் பூஜை புனஸ்காரங்களுடன் படங்களை ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஜி.வி. நடித்த படங்களில் டார்லிங் மற்றும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் மட்டுமே வெற்றி என்பதும் தற்போது கையில் வைத்திருக்கும் 6 படங்களின் நிலை என்ன என்பதும் போக போகதான் பார்க்கனும்.!

சமீபத்தில் வெளியான இவரின் படமும் வெற்றி வெற்றி என பேனர்கள் அடித்தாலும், பெரிய நஷ்டமில்ல என்று தயாரிப்பு நிறுவனம் கண்டுகாமல் விட்டதும், அப்படத்தில் பழைய பாடல்களை ரீமேக் என்ற பெயரில் சுட்டு போட்டார்.

சரியான ரைட்ஸ் வாங்கிதான் பாடல்களை இப்படத்தில் உபயோகித்தார் என்று எண்ணிய தயாரிப்பு நிறுவனத்துக்கு சம்பந்தப்பட்ட சரிகம நிறுவனத்திலிருந்து நோட்டீஸ்... எங்க பாட்டை நீங்க ஏன் உபயோகிச்சீங்கன்னு... ஜி.வி. போன் பண்ணா சுவிட் ஆஃப்...! இதுபோதாதா எந்த அளவுக்கு இவரின் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார் என்று.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions