புரூஸ்லீ படக்குழுவினருடன் தெறி விழாவை கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

புரூஸ்லீ படக்குழுவினருடன் தெறி விழாவை கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ்

விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘தெறி’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இது ஜி.வி.பிரகாஷின் 50வது படமாகும். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.


தற்போது படம் ரிலீசாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இசையில் தேவா பாடிய ‘ஜித்து ஜில்லாடி...’ பாடல் வரும்போது திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆட்டம் போடுகின்றனர்.

தன்னுடைய இசைக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் ‘புரூஸ்லீ’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.



Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions