ஜி.வி.பிரகாஷுடன் மூன்றாவது முறையாக இணையும் கயல் ஆனந்தி!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷுடன் மூன்றாவது முறையாக இணையும் கயல் ஆனந்தி!

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கயல் ஆனந்தி. இந்த படத்தில் இந்த ஜோடியின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த ஜோடி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் தற்போது ராஜேஷ் இயக்கி வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவிகா கோர் என்னும் பாலிவுட் நடிகையும் நடித்து வந்தார். இந்நிலையில், அவிகா கோருக்கு பதிலாக கயல் ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions