டைட்டில் மூலம் ஓப்பனிங் தேடும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

டைட்டில் மூலம் ஓப்பனிங் தேடும் ஜி.வி.பிரகாஷ்!

தற்போதைய இளவட்ட ஹீரோக்கள் படங்களின் கதையை விட டைட்டிலுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், வித்தியாசமான டைட்டிலாக இருந்தால்தான் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கும். திரைக்கு வரும்போது நல்லதொரு ஓப்பனிங்கும் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.

 அதனால்தான், கதையை ஓகே செய்து நடிக்கத் தொடங்குவதற்கு முன்பாக டைரக்டர்களுடன் சேர்ந்து ஹீரோக்களும் டைட்டில் டிஸ்கசன் நடத்துகிறார்கள். அப்படியே ஒருமனதாக ஒரு டைட்டிலை ஓகே செய்தபோதும் படம் திரைக்கு வரும் நேரத்தில் டைட்டிலை மாற்றி விடுகிறார்கள்.

 

அப்படித்தான் சூர்யாவின் மாஸ் படத்திற்கு கடைசியாக மாசு என்கிற மாசிலாமணி என்றார்கள். இப்போது ஜெயம்ரவியின் அப்பாடக்கருக்கு சகலகலா வல்லவன் அப்பாடக்கர் என்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது ஜி.வி.பிரகாசும் இணைந்திருக்கிறார்.

அவர் நடித்துள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதனால் அடுத்து பாஷா என்கிற ஆண்டனி என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால், பாஷா என்பது ரஜினி நடித்த பட டைட்டில்.

ஆண்டனி என்பது அதே படத்தில் வில்லனாக நடித்த ரகுவரனின் கேரக்டர் பெயர். இந்த இரண்டையும் சேர்த்தால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்றுதான் இந்த தலைப்பை வைத்திருக்கிறார்களாம். ஆனால் பாஷா என்ற பெயரை வைக்க எதிர்ப்புகள் எழும்பட்சத்தில் இந்த டைட்டிலை திருத்தம் செய்து விடுவார்களாம்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions