கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் புகார்!

Bookmark and Share

கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் புகார்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைத்த “எனக்கு இன்னொரு பேர் இருக்கு” என்ற படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் திருட்டு வி.சி.டி.கள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இணையதளத்தில் இந்த படத்தை வெளியிட்டு விட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“எனக்கு இன்னொரு பேர் இருக்கு” என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர்.

திருட்டு வி.சி.டி.யும் தயாரித்து விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் முறையிட்டேன். அவர் கடும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

சினிமாவை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். திருட்டு வி.சி.டி. மூலம் சினிமாவை சிலர் அழிக்க பார்க்கிறார்கள். அதை அனைவரும் சேர்ந்து தடுக்கவேண்டும்.

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.


Post your comment





Related News
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions