ஜி.வி.பிரகாஷின் நடிப்பு ஒத்திகை!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷின் நடிப்பு ஒத்திகை!

முன்பெல்லாம் நடிகர்கள் மட்டும்தான் நடித்தார்கள். அதன்பிறகு ஒரு கட்டத்தில் சில இயக்குனர்களே ஹீரோ ஆனார்கள்.

ஆனால் அதில் அவர்களுக்கு பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. அதனால் மறுபடியும் ஹீரோக்களை நாடி ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த நிலையில், சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட சிலர் நடிகர்களாகி விட்டனர்.

இதில் ஜி.வி.பிரகாஷை எடுத்துக்கொண்டால், அவர் முதலில் பென்சில் என்ற படத்தில்தான் நாயகனாக நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக வரவில்லை. அதனால்தான் இப்போதுவரை அப்படத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.

அதற்கடுத்து அவர் நடித்த டார்லிங் படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதனால் இப்போது த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் அதிக உற்சாகத்துடன் நடித்து வருகிறார்.

குறிப்பாக முதல் இரண்டு படங்களிலும் ஸ்ரீதிவ்யா, நிக்கி கல்ராணியுடன் நெருக்கமான காட்சிகளில் தயங்கி தயங்கி நடித்த ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் கயல் ஆனந்தியுடன் எந்தவித கூச்சமும் இல்லாமல் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.

முன்னதாக, தான் ரெக்கார்டிங் தியேட்டரில் இசைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும்போது கிடைக்கும் இடைவேளை நேரங்களில், சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளைகூட மனைவி சைந்தவி முன்னிலையில் ஒத்திகை நடத்துகிறாராம் ஜி.வி.பிரகாஷ்.

அவரது இந்த நடிப்பு ஆர்வத்தைப் பார்த்து எதிர்காலத்தில் ஒரு நடிப்பில் ஒரு பெரிய இடத்தை பிடிக்காமல் ஜிவி.பிரகாஷ்குமார் ஓயமாட்டார்கள் என்கிறார்கள். 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions