ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் பிரேமம் நாயகி

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் பிரேமம் நாயகி

தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இவர் நடித்துவரும் ‘புருஸ்லீ’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், ராஜீவ்மேனன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.

தற்போது, இப்படத்தின் கதாநாயகி யார் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் தனது நடிப்பாலும், அழகாலும் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் கட்டிப்போட்ட சாய் பல்லவிதான் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கப் போகிறார். இதை ஜி.வி.பிரகாஷே உறுதி செய்துள்ளார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions