ஜிவி 51 ‘மீண்டும் ஒரு காதல் கதை’ பட சிங்கிள் டிராக் நாளை முதல்!

Bookmark and Share

ஜிவி 51 ‘மீண்டும் ஒரு காதல் கதை’ பட சிங்கிள் டிராக் நாளை முதல்!

மலையாள திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இப்படம் தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என ரீமேக் செய்யப்படுகிறது. SVD ஜெயச்சந்திரன் வழங்கும் இப்படத்தினை மித்ரன் R ஜவஹர் இயக்குகிறார்.

அறிமுக நாயகன் ‘வால்டர் பிலிப்ஸ்’ கதாநாயகனாகவும், மலையாளத்தில் இந்த படத்தின் நாயகியாக நடித்த ‘இஷா தல்வார்’ இதிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதிய “மைபோட்டு மைபோட்டு” எனும் பாடல் ,ஏப்ரல்1ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்பாடல் திருமணச்சடங்கின் போது பாடப்படுவதாக அமைந்திருக்கிறது. இப்பாடலில் நிறைய பாடகர்கள் பாடியிருப்பதாக இசைஅமைப்பாளர் தெரிவித்தார். “ஆடுகளம்” படத்தின் ‘ஒத்த சொல்லால’ பாடல் புகழ், வேல்முருகனும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார்.

இது அவரது முதல் மெலோடிப் பாடல். இப்பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். அவர் பேசும்போது; படத்தின் நாயகன் வால்டர், தனது சகோதரியின் நடனப்பள்ளியில் படித்து வரும்போதிலிருந்தே தனக்கு தெரியும் என்றும்,

கேரளாவில் படப்பிடிப்பு செய்யப்பட்ட இந்தப் பாடல் மிக அருமையாக வந்திருப்பதாகவும் கூறினார். கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தினை உலகமெங்கும் வெளியிடுகின்றது.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions