ஜி.வி.பிரகாஷ்- ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ்- ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் இடம்பெற்ற நிறைய காட்சிகளும், வசனங்களும் மிகவும் கிளுகிளுப்பாகவும் இருந்தன. அதனால் இப்படம் இளைஞர்களை ரொம்பவும் கவர்ந்தது. முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டு வெளிவந்த இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இக்கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறது. இந்த முறையும் இளைஞர்களை கவர்கிற மாதிரியான படத்தையே இவர்கள் எடுக்கவிருக்கிறார்கள். 

அதனால், இப்படத்தின் தலைப்பையே மிகவும் கிளுகிளுப்பாக தேர்வு செய்துள்ளனர். அதன்படி, இவர்கள் இணையும் அந்த புதிய படத்துக்கு ‘வெர்ஜின் மாப்பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். 

இந்த தலைப்பே இளைஞர்களை கவரும் வகையில் இருப்பதால், படத்துக்கும் இளைஞர்களிடையே பெரிய வரவேற்பு இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை ஸ்டீவ் கார்னர்ஸ் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை இயக்கிக்கொண்டே ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘வெர்ஜின் மாப்பிள்ளை’ படத்தையும் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. எந்த படம் முதலில் முடிவடையும் என்பது பிறகு தெரியவரும்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions