பென்சில் படத்தில் என்ன ஸ்பெஷல்? : ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

பென்சில் படத்தில் என்ன ஸ்பெஷல்? : ஜி.வி.பிரகாஷ்

ஒரு சில முகங்களையே திரும்ப திரும்ப பார்த்து சலித்து போன தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அவதாரம், கோடை வெயிலுக்கு, ஜுஸ் அருந்தியது போல், ஜிலீர் புத்துணர்வை தந்துள்ளது. இசையோடு விளையாடிய அவர், தற்போது நடிப்பிலும் கால் பதித்து, கோலிவுட்டின், டார்லிங்காக வலம் வருகிறார்.

ஒரு இனிமையான இரவுப் பொழுதில் அவரை சந்தித்தபோது...

புதுமுகங்கள் படையெடுப்பு அதிகம் உள்ளதே; போட்டியை சமாளிக்க என்ன திட்டம் வைத்துஉள்ளீர்கள்?

என் வழி, தனி வழியாக இருக்கும். மெட்டுக்கு ஏற்றபடி பாட்டு பிடிக்கிற மாதிரி, பாட்டுக்கு ஏற்றபடி மெட்டு பிடிக்கிற மாதிரி, நல்ல கதையாக, அதுவும் எனக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே நடிப்பது என்ற முடிவுடன் இருக்கிறேன். பெரிய பட்ஜெட் படம், சிறிய பட்ஜெட் படம் என, ரசிகர்கள் வித்தியாசம் பார்ப்பது இல்லை. அவங்களுக்கு பிடித்த மாதிரி இருந்தால் ரசிக்கின்றனர்.

இசையமைப்பாளராகவும் ரசிகர்களின் பல்ஸ் பார்த்தவன்; நடிகனாகவும் அதை சாதிக்க நினைக்கிறேன். எல்லாம் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பென்சில் படத்தில் என்ன ஸ்பெஷல்?

பள்ளிக் கூடம் தொடர்பான த்ரில்லர் படம். ஸ்ரீதிவ்யாவுக்கும், எனக்கும் கெமிஸ்ட்ரி நல்லா, ஒர்க் அவுட் ஆகியிருக்கு. காட்சிகள் அற்புதமாக இருப்பதாக இயக்குனர் கூறினார். ஜப்பானில் படப்பிடிப்பு நடந்தபோது, திடீர்னு புயல் வந்தது. உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்து, அங்கிருந்து வேகமாக வெளியேறியதால் தப்பித்தோம்.

ஸ்ரீதிவ்யா நடிப்பு எப்படி?

தன்னுடைய கேரக்டர் என்ன என்பதை நன்றாக கேட்டு தெரிந்து, அதை தனக்குள் உள்வாங்கி, நடிப்பை திறமையாக வெளிப்படுத்துறாங்க. ஒரே, டேக்கில் காட்சிகளை, ஓகே செய்து, பாராட்டு வாங்க நினைக்கிறாங்க. ஈகோ பார்க்காத பொண்ணு. தான் உண்டு; தன் வேலை உண்டுன்னு, இருப்பாங்க.

நடிப்புக்கு தாவிட்டீங்க; இனி இசை அவ்வளவு தானா?

என்ன இப்படி கேட்டுட்டீங்க? இசை தான் எனக்கு எல்லாமே. நடிக்க வந்து விட்டதால், இசை பயணத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இசை தான் என்னை மக்களிடம் அறிமுகப்படுத்தியது. இதுவரை, 48 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பிசியாக நடித்தாலும், இப்போது கூட, மூன்று படங்களுக்கு இசையமைக்கிறேன். 'புலி'யை அடுத்து, 'விஜய்' நடிக்கும் அடுத்த படத்துக்கும் நான் தான் இசை; இது, என், 50வது படமாக இருக்கும். இசையால் நடிப்பிற்கும், நடிப்பால் இசைக்கும் எந்த பாதிப்பும் வந்து விடாமல், கவனமாக படங்களை தேர்வு செய்வேன்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா; அது என்ன அப்படி ஒரு டைட்டில்?

சினிமாவில் போட்டி அதிகமாகி விட்டது. எல்லாத்தையும் தாண்டி, ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க வேண்டுமே. அதுக்காக, எதையாவது செய்ய வேண்டியிருக்கு. இதனால் தான், இப்படி ஒரு பெயரை தேர்வு செய்தோம். படத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தால், படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும் என, ரசிகர்கள் நினைப்பர்.

ஹீரோயின்களை கட்டிப்பிடித்து நடிக்க, உங்கள் மனைவி சைந்தவி தடை விதித்துள்ளதாக...

சும்மா, பில்டப் பண்ணாதீங்க பாஸ்; அவங்க, அவங்க வேலையை பார்த்துட்டு இருக்காங்க; நான், என் வேலையை பார்த்துட்டு இருக்கேன். ஹீரோயின்களை கட்டிப்பிடித்து நடிக்க, சைந்தவி எனக்கு தடையெல்லாம் போடலை. எனக்கு எப்போதும் நல்ல கணவராக இருந்தால் போதும்; சினிமாவில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என, முழு சுதந்திரம் கொடுத்துட்டாங்க. அதனால், காதல் காட்சிகளில் பட்டையை கிளப்ப முடிவு பண்ணியிருக்கிறேன். அடுத்தடுத்த படங்களில், உங்களுக்கே அது தெரியும்.

சொந்தமாக படமும் தயாரிக்கிறீங்களே?

'மதயானை கூட்டம்' படத்தை தயாரித்தேன். படத்துக்கு நல்ல பெயர் கிடைத்தாலும், கையை கடித்து விட்டது. நல்ல கதை இருந்தால், தயாரிப்பில் நம்பி இறங்கலாம். தொடர்ந்து படங்களை தயாரிக்கும் ஐடியா இருக்கு. ஆனால், இப்போது அதற்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்துள்ளேன்.

நடிக்க வரும் இளைஞர்களுக்கு உங்கள் அட்வைஸ்?

அய்யய்யோ; அட்வைஸ், அது இதுன்னு சொல்லி, என்னை சூப்பர் சீனியராக்கிடாதீங்க. நானும் சின்னப் பையன் தான். ஆனாலும், சினிமாவுக்கு வரும் முன், தாங்கள் சம்பந்தபட்ட துறையில் உள்ள விஷயங்களை முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் ஆசையுடனோ, வேறு ஏதாவது தேவையுடனோ வந்தால் சிக்கல் தான்.


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions