ஜி.வி.பிரகாஷின் நேர்மை!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷின் நேர்மை!

தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் மட்டுமின்றி கிராமிய பாடல்களுக்கும் தற்போது நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன்காரணமாகவே சென்னையில் பாடிக்கொண்டிருந்த கானா பாடகர்களெல்லாம் ரெக்கார்டிங் தியேட்டர்களில் அலைமோதிக்கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில் வீதிகளில் பாடிக்கொண்டு திரிந்த ஏராளமான கிராமிய பாடகர் பாடகிகளும் சென்னையை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அப்படி வருபவர்களில் சிலருக்கு சான்ஸ் கிடைத்தபோதும், பலருக்கு கிடைப்பதில்லை. அதனால் சில மாதங்கள் கோடம்பாக்கத்தை சுற்றி வந்து விட்டு பின்னர் சொந்த ஊருக்கே பஸ் ஏறி விடுகிறார்கள்.

இந்தநிலையில், கொம்பன் படத்துக்காக ராமநாதபுரம் சென்றிருந்தபோது, அங்குள்ள கிராமங்களில் தெருப்பாடகராக இருந்து வந்த மகாலிங்கம் என்பவர் சான்ஸ் கேட்டு சென்றாராம்.

அதோடு, தான் எழுதி பாடிய பாடல்களை பாடியும் காண்பித்திருக்கிறார். அதையடுத்து, விசயம் சென்னையில் இருந்த அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அந்த நபரை சென்னைக்கு வரவைத்து அந்த பாடலை அவரையே பாடவும் வைத்திருக்கிறார்.

ஆனால், நல்ல குரல்வளம் கொண்ட மகாலிங்கத்தினால் ஸ்வரம் பிடித்து பாட முடியவில்லையாம். ஒரே பாடலை பல ஸ்கேல்களில் பாடியிருக்கிறார். அதன்காரணமாக பாடலில் அவர் பெயரை போட்டு விட்டு வேறு பாடகரை வைத்து பாட வைத்திருக்கிறார் ஜி.வி.,பிரகாஷ்.

மேலும், அப்படத்தின் பிரஸ்மீட்டின்போது அந்த நபரை மேடையேற்றி, அவர் எழுதி டியூன் போட்டு பாடிக்காட்டிய பாடலுக்குத்தான் நான் இசையமைத்தேன் என்றும் தெரிவித்தார் அவர்.

மற்றவர்களின் டியூனைகூட தனது டியூன் என்று சொல்லிக்கொள்ளும் இந்த காலத்தில் ஒரு கிராமத்து பாடகரின் டியூனுக்குத்தான் நான் இசையமைத்திருக்கிறேன் என்று மேடையில் தெரிவித்த ஜி.வி.பிரகாஷின் இந்த நேர்மையை கோடம்பாக்கத்தில் பெருமையாக பேசி வருகின்றனர்.


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions